×

புரோ கபடி லீக் தொடக்க லீக் ஆட்டத்தில் யு மும்பா அபார வெற்றி

பெங்களூரு: புரோ கபடி லீக் தொடரின் 8வது சீசன் தொடக்க லீக் ஆட்டத்தில், யு மும்பா அணி அபாரமாக வென்றது. ஒயிட்பீல்டு, ஷெரடன் கிராண்ட் களத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்த யு மும்பா அணி  46-30 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. அந்த அணியின் அபிஷேக் அதிகபட்சமாக 19 புள்ளிகளைக் குவித்தார். பெங்களூரு புல்ஸ் சார்பில் சந்திரன் ரஞ்சித் 13, கேப்டன் பவன் ஷெராவத் 12 புள்ளிகள் எடுத்தனர். யு மும்பா அணி 5 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Tags : Mumba ,Pro ,Kabaddi League , U Mumba wins Pro Kabaddi League opening league match
× RELATED நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது...