திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலை ஆன்-லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள்  ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளை  24 தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு என ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும் ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்கள் என தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளது.

ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்கள் 25ம் தேதி காலை 9 மணிக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 55 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிடப்பட உள்ளது.

திருப்பதியில் வரும் 31ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்கள்  திருப்பதிக்கு நேரடியாக  வரும் பக்தர்களுக்கு என தினந்தோறும் 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் ஜனவரி மாதத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: