வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு

கடலூர்: வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 23.12.2021 முதல் 120 நாட்களுக்கு கீழ்மட்டக் கால்வாய்க்கு 1140.48 மி.க.அடி மற்றும் 80 நாட்களுக்கு மேல்மட்டக் கால்வாய்க்கு 622.08 மி.க.அடி ஆக மொத்தம் 1762.56 மில்லியன் கன அடி  தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன  வசதி பெறும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: