ஆலப்புழா பாஜ தலைவர் கொலை: எஸ்டிபிஐயை சேர்ந்த 5 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜ தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், ஆலப்புழாவில் கடந்த 4 நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ மாநில செயலாளர் ஷான் மற்றும் பாஜ ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு காரணமாக ஆலப்புழாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்து. தற்போது மேலும் 2 நாட்களும் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரஞ்சித் சீனிவாசன் கொலை தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இந்த கொலையில் ேநரடி தொடர்பு உள்ளவர்கள் எனவும் கூறப்படுகிறது. இவர்கள் வந்த 4 பைக்குகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே எஸ்டிபிஐ செயலாளர் ஷான் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களான  ராஜேந்திர பிரசாத், ரதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்று ஆலப்புழா நீதீமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: