×

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளாவுடன் சென்னை இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 37வது லீக் போட்டியில் கொல்கத்தா- கவுகாத்தி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றி பெற்றது. 7வது போட்டியில் கொல்கத்தா 3வது வெற்றியை பெற்றது.

இன்று இரவு 7.30மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னையின் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை 6 ஆட்டத்தில் 3 வெற்றி , 1 தோல்வி, 2 டிரா என 11 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கேரளா  6 போட்டியில் 2 வெற்றி , 1  தோல்வி, 3 டிரா என 9 புள்ளியுடன் 6வது  இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 16முறை மோதி உள்ளன. இதில் சென்னை 6, கொல்கத்தா 3ல் வென்றுள்ளன 7 போட்டி சமனில் முடிந்துள்ளது.

Tags : ISL ,Chennai ,Kerala , ISL football: Chennai clash with Kerala today
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை