கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை நிறைவு

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமாகிய விவேக் ஜெயராமனிடம் கோவையில் விசாரணை நடைபெற்றது.  கோடநாடு பங்களா உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது. கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தியது. கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories: