×

திருமங்கலம் அருகே ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகே ஆட்டோ மீது லாரி கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலிருந்து காளிராஜன் என்பவர் கட்டிட வேலைக்காக டிப்பர் லாரியில் மண் ஏற்றி வந்துள்ளார்.

இவர் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தியார்குண்டு நெடுஞ்சாலை பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக சாலையை கார் ஒன்று கடக்க முயன்றுள்ளது, இதனை கண்ட லாரி ஓட்டுநர் விபத்தினை தவிர்ப்பதற்காக லாரியை இடது புறமாக திரும்பியுள்ளார்.

இதில் லேசாக காரில் உரசிய வண்ணம் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது கவிழ்ந்து விபத்தினை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் தோப்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபால் ஆட்டோவில் சிக்கி படுகாயமடைந்தார்.

மேலும் லாரி ஓட்டுநரும் காயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : Lorry ,Thirmanangalam , Truck overturns on auto near Thirumangalam: Auto driver killed
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர்...