உடல்நலக்குறைவால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியை மீண்டும் சேர்க்க தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உடல்நலக்குறைவால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியை மீண்டும் சேர்க்க தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த நித்யா அண்ணா பல்கலை. கலந்தாய்வின் மூலம் தனியார் கல்லூரியில் 2016ல் சேர்ந்தார். இ.சி.இ பிரிவில் சேர்ந்த மாணவி உடல்நலக்குறைவால் 2018ம் ஆண்டு முதல் கல்லூரிக்கு செல்லவில்லை. உடல்நிலை சீரான பின்பு 2021 ஜூலை மாதம் முதல் மீண்டும் கல்லூரிக்கு சென்றுள்ளார். மாணவியின் மறுசேர்க்கைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஜனவரி 2022ல் நடைபெற உள்ள 5வது செமஸ்டர் தேர்வெழுத மாணவியை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: