திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் முன்னோட்ட கணக்கெடுப்பு தொடக்கம்-164 பேர் பங்கேற்பு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் முன்னோட்ட கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் வரும் ஜனவரி மாதம் புலிகள் மெகா கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த சரணாலயத்தில் புலிகள், சிறுத்தைகள், காட்டுயானைகள், காட்டெருமைகள், கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வரும் ஜனவரியில் புலிகள் சரணாலயத்தில் மெகா கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக, சரணாலய துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவின்பேரில், 4 நாட்களுக்கு புலிகள் முன்னோட்ட கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டு, நேற்று காலை பணி தொடங்கியது.

திருவில்லிபுத்தூர் வனத்துறையில் 41 பீட்கள் உள்ளன. இதில், மொத்தம் 164 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு என்ற முறையில் சுமார் 2 கிமீ தூரம் சென்று வனத்துறையினர் கணக்கெடுக்கின்றனர். புலிகளின் எச்சங்கள், கால் தடங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பில் சேகரிக்க உள்ளனர். இப்பணியில் ஈடுபடும் வனத்துறையினரின் செயல்பாடுகள், ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

Related Stories: