×

மியான்மரில் பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 80 பேரின் நிலை என்ன?

மியான்மர் : மியான்மரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து இறந்த அதே சுரங்கத்தில் இன்று 80க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு மியான்மரில் அமைந்துள்ள காச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த சுரங்கப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக வந்த மீட்புப் படையினர், 25 பேரை பலத்த காயங்களுடன் காப்பாற்றினர்.

ஆனால் 80த்திற்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக மீட்புப் படை வீரர்கள் கூறியுள்ளனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி இதே காச்சின் மாணிக்க சுரங்கத்தில் 170 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து இறந்தனர். தற்போது மீண்டும் அதே போன்றது ஒரு கோர விபத்து ஏற்பட்டது. 10 மாதங்களாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடத்தபதால் மீட்புப் பணி குறிப்பிடும் படி இருக்காது என்றும் புகாரும் எழுந்துள்ளது. தற்போது காச்சின் மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.


Tags : Myanmar , மியான்மர்
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்