×

திருப்பத்தூர் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்-கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றும் பணிக்காக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு பணிகள் நடைபெற்றது. அதன்படி, இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பள்ளி கட்டிடம் ஆகியன குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 231 பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. அதன்படி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, எலவம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடமாடும் மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.அப்போது, எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சித்ரகலா, எலவம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா, துணைத்தலைவர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Tirupati district , Tirupati: Collector Amar Kushwaha personally inspected the demolition work of dilapidated school buildings in Tirupati district.
× RELATED ஸ்ரீகாளஹஸ்தியில் பேருந்து யாத்திரை சென்ற முதல்வர் ஜெகன்மோகன்