அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால் ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை மீட்க முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால் ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை மீட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர், நாகமங்கலம் உள்பட 7 ஊர்களில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க கோரி ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்கள், தானமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் தனியாருக்கு விற்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related Stories: