தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவடைய உள்ள நிலையில் டிசம்பர் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட  வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 24-ம் தேதி வரை இயல்பான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் தெளிவாக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 68 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக நீடிக்கும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவடைய உள்ள நிலையில் டிசம்பர் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: