×

அதிக ஜிஎஸ்டி வரி கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு 4 அல்ல 14 சர்வதேச விமான நிலையங்கள் கோரும் உரிமை உள்ளது. எம்.பி. சு வெங்கடேசன் பதிலடி

சென்னை: இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வரி கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு 4 அல்ல 14 சர்வதேச விமான நிலையங்கள் கேட்கும் உரிமையும் தகுதியும் உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தென் மாவட்ட எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான மனுவை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் சு வெங்கடேசன் ஆகியோர் நேரில் அளித்தனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சு. வெங்கடேசன், பல வடமாநிலங்களில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” என்கிறார் விமானத்துறை அமைச்சர்.கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம். நாங்கள் 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள்,என்றார்.


Tags : Tamil Nadu ,Su Venkatesh , சு. வெங்கடேசன்
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து