×

3 மாதங்களில் செயல் திறன் இழக்கும் கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி!: இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இங்கிலாந்து: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 மாதங்களில் அது தனது செயல்திறனை இழக்க ஆரம்பிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த பல நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்குள் இருந்து வருகிறது. ஒரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் பயமுறுத்தினாலும் கூட கொரோனா கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதலே பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை போடும் பணியை வேகப்படுத்தின. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பெரும்பாலும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகாக கோவாக்சின் தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களில் செயல் திறன் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கின.

எனினும் இந்த தடுப்பூசியால் கிடைக்கிற பாதுகாப்பு 2 டோஸ் செலுத்தி முடித்த மூன்றே மாதங்களில் கேள்வி குறியாவதாகவும் இந்த தடுப்பூசி அதற்குள் தனது செயல்திறனை இழப்பதாகவும் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதே தடுப்பூசியை தான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது. ஆக்ஸ்போர்ட், ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு ஸ்காட்லாந்தின் 20 லட்சம் பேர், பிரேசிலின் 4 கோடியே 20 லட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


Tags : UK , Efficacy, Covshield vaccine, study
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...