×

இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்றால் முதல் பலி... 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்!!

ஜெருசலேம் : இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியா உட்பட 90 உலக நாடுகளில் பரவி உள்ளது. வேகமாக பரவும் இந்த வகை வைரஸ், இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் ஒமிக்ரானின் கோர தாண்டவம் தொடங்கி விட்டதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.பீர்ஷெபா நகரில் உள்ள சொரோகா மருத்துவ மையத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளார். இதனிடையே கடுமையான இணை நோய்களால் இவர் அவதிப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாச தொற்றால் இவர் இறக்கவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. இதுவரை இஸ்ரேலில் ஒமிக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 340 மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



Tags : Israel , இஸ்ரேல்
× RELATED இஸ்ரேல் ஏற்படுத்திய பேரழிவுக்கு...