தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கணினி பதிவு முகாம்

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கணினி பதிவு முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கணினி பதிவேற்றம்  முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் லிங்கேஸ்வரன், துணை ஆய்வாளர் கமலா, பொன்னிவளவன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்துகண்டனர். முகாமில் தேவரியம்பக்கம், தோண்டங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கம்பெனி, சுய தொழில்கள் மற்றும்  பல்வேறு பணிகளை செய்பவர்கள் கலந்து கொண்டு கணினியில் பதிவு செய்து கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: