நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி தலைமை வகித்தார். மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மறைமலைநகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் பாரபட்சமில்லாமல் கடுமையாக உழைத்து, அனைத்து வார்டுகளிலும் கூட்டணி கட்சிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என பேசினார். இதில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசுதனன், முன்னாள் எம்எல்ஏ டி.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், சிறுபான்மை அணி செயலாளர் ஆல்பர்ட், நகர துணை செயலாளர்கள் முத்து, சீனுவாசன், வனிதா சுரேஷ், நகர பொருளாளர் முருகேசன், இளைஞரணி டி.கே.கமல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் முருகன், ஜார்ஜ், மாவட்ட பிரதிநிதிகள் சர்தார் பாஷா, கணேஷ்பாபு, பேரூர் துணை செயலாளர்கள் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும். அதற்காக திமுக தீவிர தேர்தல் பணியாற்றி, அனைத்து வார்டுகளிலும் கூட்டம் நடத்த வேண்டும். என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், சிறப்பு மாவட்ட பிரதிநிதி தாமோதரன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: