×

4 நாள் பயணம் ஜனாதிபதி கேரளா வருகை

திருவனந்தபுரம்: ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த கேரளாவில் 4 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று மதியம் கண்ணூர் விமான நிலையம் வந்தார். அவரை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அமைச்சர் கோவிந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அவரது மனைவி சவிதா, மகள் சுவாதி உடன் வந்தனர். பின்னர், ஹெலிகாப்டரில் காசர்கோடு சென்ற கோவிந்த், பெரியார் மத்திய பல்கலை கழக பட்டமளிப்பு  விழாவில் கலந்து கொண்டார். பின்னர், கண்ணூர் திரும்பிய அவர், விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு சென்றார். இன்று காலை கொச்சி தென்பிராந்திய கடற்படை மையத்தில் நடைபெறும் கடற்படை வீர்களின் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார்.


Tags : President ,Kerala , 4 day visit President visits Kerala
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!