எஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் முறைகேடு 7 கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் நேரில் ஆஜர்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துவதற்காக கல்வி உதவி தொகையி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. பிரிவிற்கான  கல்வி உதவித்தொகை தொடர்பாக வெளியான சிறப்பு தணிக்கை அறிக்கையின்  அடிப்படையில் ரூ. 17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 369 மோசடி நடந்திருப்பதாக வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு பயிற்சி பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மருத்துவக் கல்லூரிகளில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகையில்  முறைகேடு நடந்திருப்பதை பட்டியலிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகை  ரூ.4 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரம் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாத ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 4ம் தேதி வழக்கு பதிவுசெய்தனர். இந்நிலையில் 52 கல்லூரிகளின் முதல்வர்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியததின்பேரில்  நேற்று 7 கல்லூரி முதல்வர்கள் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜரானார்கள். இவர்களிடம் போலீசார்விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த விசாரணை நடக்கும் எனஇந்த ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: