ராணுவ உடையில் வழிப்பறி; ராஜஸ்தான் வாலிபர் கைது

புழல்: சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்குமார் (34), கேரள மாநிலத்தில் இருந்து நேற்று லாரியில் ரப்பர் லோடு ஏற்றிக்கொண்டு சோழவரம் அடுத்த இருளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு வந்தார். அப்போது, ராணுவ உடையில் இருந்த வாலிபர், லாரியை தடுத்து நிறுத்தி, டிரைவர் சுரேஷ்குமாரிடம் வண்டியின் ஆவணங்களை கேட்டுள்ளார்.  அவர், நீங்கள் எதற்கு ஆவணத்தை கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிஓட முயற்சித்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை சுரேஷ்குமார் மடக்கி பிடித்தார். பின்னர், இதுபற்றி சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து ராணுவ உடையில் இருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சத்யாவீர் (23) என்பதும், ராணுவத்தில் பணிபுரியும் தனது சகோதரரின் உடையை அணிந்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: