கடலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவாளர்கள் இடையே மோதல்: 4 பேர் கைது, 13 பேர் மீது வழக்குப்பதிவு...

கடலூர்: கடலூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பினரையும் சேர்த்து 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களில் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் பாதிரி குப்பதிலுள்ள அதிமுக அலுவலகத்தில்  உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதின் நகர பதவிகளை பிரிப்பதில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர்.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் மற்றும் நகர துணை செயலாளர் கந்தன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அப்போது ஒருவரிலொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களில் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் இந்த மோதல் சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கடலூர் அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: