×

கே.வி.குப்பம் அருகே கரை உடைந்த கசிவுநீர் குட்டையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

கே.வி‌.குப்பம் : கே.வி.குப்பம் அடுத்த பணமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பகுதியில்  உள்ள முதல்  நாகமரமேடு என்ற  பகுதியில் கசிவு நீர்  குட்டை   கடந்த 2001ம் ஆண்டு ₹7.60 லட்சம் மதிப்பீட்டில் திமுக ஆட்சியில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனால் அமைக்கப்பட்டது. மேலும், அதே ஆண்டு பெய்த கனமழையால் கசீவு நீர் குட்டை நிரம்பியது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி நிரம்பியது. மேலும், லத்தேரி- பரதராமி சாலையில் ஆந்திர- தமிழக எல்லையோரம் இருக்கும் இந்த கசிவு நீர் குட்டை சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

இந்த கசிவு நீர் குட்டையின் உபரி நீர் பள்ளத்தூர், மூலவலசை, பணமடங்கி உட்பட சுமார் 5க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு  சுமார் 10 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட கசீவு நீர் குட்டையின் கரை தண்ணீர் ஊறியதால், கரை உடைக்கப்பட்டு, கரையை ஒட்டியுள்ள மரங்கள் வேருடன் கீழே விழுந்தது. இதுகுறித்து அறிந்த அப்பகுதியினர், கசிவு நீர் குட்டையில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி,   ஜெ.சி.பி இயந்திரம் மூலம் கரையினை சீர் படுத்தும் பணியில் மேற்கொண்டு வந்தனர்.  

இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 16ம் தேதி வெளியானது. அதன் எதிரொலியாக  நேற்று முன்தினம் வரை தண்ணீர்  முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, உடைந்த கரையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிமாக மணல் முட்டைகள் அடுக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அபாய நிலையில் உள்ள இந்த கரையை முழுவதும் சீர் செய்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே, நிரந்தர தீர்வாக கரையை அகற்றிவிட்டு தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : KV Kuppam: KV Kuppam is the next cash-strapped panchayat in Pallathur, the first Nagamaramedu area to have a leaking water well.
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...