×

பெரணமல்லூர், செய்யாறு, கலசபாக்கம், ஆரணியில் 650 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-எம்எல்ஏக்கள் பங்கேற்று சீர்வரிசைகளை வழங்கினர்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, முன்னாள் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை முன்னிலை வகித்தனர். குழந்தைகள் திட்ட அலுவலர் சரளா வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி, அரசு தரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். மேலும் கர்ப்பிணி களுக்கு ஏழு வகை உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராதா, முன்னாள் ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கண்காணிப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

செய்யாறு: செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனுவாசன்  தலைமைத் தாங்கினார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி வரவேற்றார், வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவர் மாமண்டூர் டி.ராஜூ, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அருள்மொழி செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விரு்தினராக செய்யாறு எம்.எல்.ஏ ஓ.ஜோதி பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து 100  கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.400 மதிப்புள்ள சேலை, வளையல் அடங்கிய சீர்வரிசைத்தட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு 5 வகை சாதத்துடன் உணவு பரிமாறப்பட்டது.

கலசபாக்கம்: கலசபாக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்ைத வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வக்கில் க.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நெ.சரண்யா வரவேற்றார். நிகழ்ச்சியில் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கினார்.

ஆரணி: மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 300 கர்ப்பிணி களுக்கு சமுதாய வளைகாப்பு விழா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த குந்தை வளர்ச்சி திட்டம் பணிகள் சார்பில்சேவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இவ்விழாவிற்கு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய குழு துணை தலைவர்கள் வேலாயுதம், ராஜேந்திரன்,  மாவட்ட கவுன்சிலர்கள் அருணா, பூங்கொடிதிருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.


Tags : Community Babysitting ,Peranamallur ,Seiyaru ,Kalasapakkam ,Arani , Peranamallur: On behalf of the Peranamallur Integrated Child Development Project Services Department, a community baby shower was held yesterday.
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்