சர்வாதிகாரி போல் செயல்படும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!: முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சர்வாதிகாரி போன்று செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஒருசில அமைச்சர்கள் அவர்கள் தொகுதியை சேர்ந்த தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். காரைக்காலை சேர்ந்த சங்கர் என்பவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் மழைக்கால நிவாரணமாக அறிவித்த 5 ஆயிரம் ரூபாய் எப்போது கொடுக்கப்படும் என்று கேட்கும் போது முதலமைச்சர் ரங்கசாமி அவரை மிரட்டியிருக்கிறார்.

அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரே ஆட்களை தூண்டிவிட்டு அறிவித்த நிவாரணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்பவர்கள் மீது கொலை மிரட்டல் விடுவது முதலமைச்சர் என். ரங்கசாமி எந்த அளவிற்கு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்பது தெளிவாக காட்டுகிறது என்று குறிப்பிட்டார். தொழில் அதிபர்களிடம் அமைச்சர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் எழுந்திருப்பதாகவும், வேண்டியவர்களுக்கு லேபர் காண்டிராக்ட் கேட்பது அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது என்றும் நாராயணசாமி குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாமூல் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினோம். ஆனால் தற்போது அது தாராளமாக நடக்கிறது. வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கி உள்ளது. சட்டம், ஒழுங்கு கெட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.

Related Stories: