இந்தியா - தென் ஆப்ரிக்கா தொடரின்போது மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி ரத்து

மும்பை: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர்களை மைதானத்திற்கு சென்று காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியமும், பிசிசிஐ-யும் கூட்டாக தெரிவித்துள்ளன. தென் ஆப்ரிக்காவில் கொரோனா நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டப்படி தொடரை நடத்தவும் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.

Related Stories: