என் சாவுக்கு யாரும் காரணமில்லை!: சென்னையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை..போலீசார் விசாரணை..!!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 26 வயதான சாதிக் பாட்சா, கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வந்தவர். கிருஷ்ணகிரியை சேர்ந்த இவர், கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவில் தன்னுடன் பணியாற்றும் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்துள்ளார். காவல்துறை கூடைப்பந்து அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாதிக் பாட்சா, தனியார் மருத்துவமனையிலும், எழும்பூர் காவலர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து அவருடன் தங்கியுள்ள நண்பர்கள் அறைக்கு வந்த போது உள்பக்க கதவு தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாதிக் பாட்சா தூக்கிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் தலைமை செயலக காலணி போலீசார், உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: