×

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

மதுரை: அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2,276 இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 13,832 இடங்களுக்கும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வில் 22-12-2021 அன்று சிறப்பு பிரிவினருக்கு (முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள்) கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2021-2022 கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேருவதற்கு 64,900 விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,276 இடங்களும், சுயநிதிக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன. இவற்றின் முழு விவரங்கள் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Medicinal Graduates , medical
× RELATED நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில்...