'தமிழ்த்தாய் வாழ்த்தை முழு பாடலாக வைத்தால் பாஜகவுக்கு தான் சங்கடம்': கி.வீரமணி பேச்சு

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடலையும் வைத்தால் பாஜகவுக்கு தான் சங்கடம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை பெரியார்த்திடலில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அன்பழகனின் பல்வேறு சிறப்புகளை பட்டியலிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழு பாடலையும் வைத்தால் பாஜகவுக்கு தான் சங்கடம் என அவர் கூறினார். முன்னதாக விழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் பேராசிரியரின் பல்வேறு சிறப்புகளை நினைவுகூர்ந்தனர்.

பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவில் அவரது மகன், மகள், மருமகன், மருத்துவர் சொக்கலிங்கம் உள்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய துரைமுருகன், பேராசிரியர் போல் பயமில்லாதவரை பார்க்க முடியாது என்று புகழாரம் சூட்டினார். பெரியார், திராவிட கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

Related Stories: