×

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு, தகவல்களை வெளியிட வேண்டும் : சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு அழுத்தம்!!

ஜெனீவா : கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை வெளியிட வேண்டும் என சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கோரிக்கை விடுத்துள்ளார். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்னும் புதிய அவதாரத்துடன் பரவி வருகிறது. இது  தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த நிலையில்,ஜெனீவா தலைமையக கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது.இது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. மேலும் கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களும், மீண்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம், என்றார். மேலும் கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை சீனா வெளியிட வேண்டும் என்று சீனாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ள  டெட்ரோஸ் அதானோம், கொரோனாவின் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை கடந்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.


Tags : World Health Organization ,WHO ,China , டெட்ரோஸ் அதானோம்
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...