×

லக்கிம்பூர் விவகாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, பெகாசஸ் போன்ற பிரச்சனைகளில் குரல் எழுப்புவதை நிறுத்த முடியாது :ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி : ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது மக்களின் வாக்குரிமையை பறிக்கக் கூடிய செயல் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒன்றிய அரசால் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ஒன்றிய அரசு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அதனால் எதிர்க்கட்சிகள் போராடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தைக் கையாளத் தெரியாத என்ன மாதிரியான அரசு இது ? லக்கிம்பூர் விவகாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, லடாக் விவகாரம், பெகாசஸ், எம்பிக்கள் இடைநீக்கம் போன்ற பிரச்சனைகளில் குரல் எழுப்புவதை நிறுத்த முடியாது. உங்களுக்குத் தைரியம் இருந்தால் விவாதம் நடக்கட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.இதற்கிடையே இந்த மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மசோதா மீது விவாதம் நடத்த அனுமதிக்காமல் எம்பிக்களின் ஓட்டளிக்கும் உரிமம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற குழு ஆய்வு நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.


Tags : Lakimpur ,Pegasus ,Ragul Gandhi , லக்கிம்பூர் விவகாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, பெகாசஸ்
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...