×

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: எடப்பாடி உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

சேலம்: மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நேர்முக உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி. இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நெய்வேலியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நடுப்பட்டி மணியை போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். இவர் ஜாமீன் கேட்டு சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

இதையடுத்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு, சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் தம்பிதுரை வாதிடுகையில், ‘‘இவர் நேரடியாகவே ரூ.5 லட்சம் வாங்கியுள்ளார். எனவே ஜாமீன் கொடுக்க கூடாது,’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி இளங்கோ, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா: ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு அருள் பாலித்த நடராஜர், சிவகாமசுந்தரி

சிதம்பரம்:   சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்தாண்டு மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் பல்வேறு பூஜைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கொரோனா பரவலையொட்டி தேரோட்டம், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகளுக்கு முதலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழா நேற்று மாலை 6 மணியளவில் நடந்தது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கோயிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜரை வழிபட்டனர். வழக்கமாக நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை நடைபெறும். ஆனால் சில ஆண்டுகளாகவே தீட்சிதர்கள் மிகவும் காலதாமதமாக திருவிழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு உச்சபட்சமாக மாலை 6 மணிக்கு மேல்தான் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனால் சாமி கும்பிட வந்திருந்த  பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.

நடராஜர் நடனம் படம் எடுக்க தீட்சிதர்கள் தடை
நடராஜர் சுவாமி தெரியும்படி புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என்று பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களிடம் சில தீட்சிதர்கள் கூறினர். இதனால் அவர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கோயிலுக்கு உள்ளே கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கியில் தீட்சிதர்கள் சார்பில் யாரும் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. கேமரா மற்றும் புகைப்படக்காரர்கள் நின்றிருந்த இடத்திற்கு நேரே தீட்சிதர்கள் சிலர் மிகப்பெரிய துணி ஒன்றை கட்ட முயன்றனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் துணியை எடுத்து சென்று விட்டனர்.

Tags : Edappadi , Fraud, Edappadi Assistant, Bail Petition, Dismissal
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...