நடாலுக்கு கொரோனா

துபாயில் நடந்த காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (35) நாடு திரும்பியதும், விமானநிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இது குறித்து நடால், ‘இது உற்சாகமான சூழல் இல்லை. ஆனாலும் கொஞ்சம், கொஞ்சமாக நிலைமை மேம்படும் என்று நம்புகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் எச்சரிக்கை செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். காயம் காரணமாக நீண்ட நாட்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடால், ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்பதும் சந்தேகமாகவே உள்ளது.

Related Stories: