×

மின் ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ராணுவ உதவியுடன் ஸ்ரீநகரில் மின் இணைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மின்துறையை இந்திய மின்துறையுடன் இணைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல், மின்துறை சொத்துகளை தனியார் மயமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு காஷ்மீரில் 20,000க்கு மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் மின்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் நகரின் பல பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில்,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,’’ என்று தெரிவித்தார்.

காஷ்மீருக்கு 1 ஜம்முவுக்கு 6
தொகுதி வரையறை செய்யும் ஒன்றிய அரசின் எல்லை நிர்ணய ஆணையத்தின் வரைவு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், காஷ்மீருக்கு 1 தொகுதி, ஜம்முவுக்கு 6 புதிய தொகுதிகளும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் எம்பி.யுமான பரூக் அப்துல்லா கலந்துகொண்டார். இது குறித்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது டிவிட்டரில், ``ஜம்மு காஷ்மீர் தொகுதி எல்லை நிர்ணயம் குறித்த வரைவு பரிந்துரை ஏற்றுக் கொள்ள முடியாதது. புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் காஷ்மீருக்கு 1, ஜம்முவுக்கு 6 என்பது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நியாயப்படுத்தப்படவில்லை,’’ என்று கூறியுள்ளார்.

Tags : Srinagar , Electrical staff, struggle
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...