உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வழங்கினார்

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகர இளைஞர் அணி சார்பில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. நகர இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே.கமல் தலைமை வகித்தார்.  நகர திமுக நிர்வாகிகள் முத்து, ஆர்.சீனுவாசன், சுப்பிரமணி, முருகேசன் நித்யாநந்தம், எஸ்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்  கலந்துகொண்டு, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட  பேரமனூரைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை தொகுப்பு, காய்கறிகள், ரெயின்கோட், குடை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின்  திமுக இளைஞர் அணி மாநில செயலாளராக சிறப்பான கட்சி வளர்ச்சி பணிகளை செய்து, திமுக தலைவர்கள் தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, தினமும் மக்கள் பணி செய்து, தொகுதி மக்களிடமும் தமிழக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று, மக்கள் சேவை செய்வதில்  முன்னுதாரணமாக விளங்குகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவரும் கொண்டாடி வருகின்றனர் என்றார். நிகழ்ச்சியில்,  நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டி.மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: