×

நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு காலக்கெடு வேண்டும்: திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்

புதுடெல்லி: நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேலும் இதனால் மாணவர்கள் பாதிப்படைகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு மாநில சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில்,‘‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, கடந்த மூன்று மாதங்களாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களின் மீது ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் வகையில் அரசியலமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,Wilson , Neet Exemption Bill, DMK MP Wilson
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி