×

இந்திய தொல்லியல்துறை பாதிக்கப்பட்டுள்ளதா?: திமுக எம்பி கதிர் ஆனந்த்

புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் நேற்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில்,டைரக்டர் ஜெனரல் மற்றும்  உயர் பதவிகளுக்கு தொல்லியல் துறை சார்ந்த தகுதி வாய்ந்த வல்லுநர்கள் இல்லாததால் இந்திய தொல்லியல் துறையின் செயல்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட கேள்விகளுக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வளர்ச்சிக்கான ஒன்றிய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில்,‘‘தொல்லியல் துறைக்கான ஒன்றிய ஆலோசனை வாரியத்தின் கடைசிக் கூட்டம் 17.10.2014 அன்று நடைபெற்றது. இதில் 13 மாநில அரசு நியமன உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 53 பேர் கலந்து கொண்டனர். முந்தைய வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஐந்து உறுப்பினர்களின் நிலைக்குழு இடைக்கால நடவடிக்கையாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு உதவுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையில் தற்போது காலி பணியிடங்கள் உள்ளது. அதனை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

Tags : DMK ,Kathir Anand , Archaeological Survey of India, DMK MP, Kadir Anand
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்