×

தூய்மை இந்தியா திட்டத்துக்காக தமிழகத்துக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு?: திமுக எம்பி ராஜேஷ்குமார்

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை கழிப்பறை கட்டப்பட்டுள்ளது?. என்ற கேள்வியை திமுக எம்பி ராஜேஷ்குமார் நேற்று மாநிலங்களவையில் எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், ‘தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக ஒரு கட்டிடத்திற்கு என்று 1 லட்சத்து 26ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனை மாநிலங்கள் திட்டத்தில் இருக்கும் வேறு கட்டிடங்களுடன் கூட இணைத்து செயல்படுத்திக் கொள்ளலாம்.

இதில் 2018-19க்கு 760.99 கோடியும், 2019-20ல் 137.80கோடியும், அதே போன்று 2020-21க்காக 162.89 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் நாடு முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழே எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த திமுக எம்பி ராஜேஷ்குமார் கேள்விக்கு 2011-12ம் ஆண்டு காலக்கட்டத்தில் 27 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர் எனறு தெரிவித்துள்ளதே தவிர, தற்போதைய புள்ளி விவரங்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Tamil Nadu ,DMK ,Rajeshkumar , Purity India, DMK, MP Rajeshkumar
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்