×

கோவாவில் மேலும் ஒரு காங். எம்எல்ஏ ராஜினாமா

பனாஜி: கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை வெளியிட்டது. இதில் தேர்தலில் போட்டியிடும் 8  வேட்பாளர்களின் பெயர்களை குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த அலெக்சியோ ரெஜினால்டோ லாரென்சோ திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். காங்கிரசின் மாநில செயல் தலைவர் மற்றும் கர்டோரிம் தொகுதி எம்எல்ஏவான அலெக்சியோ நேற்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இது குறித்து காங்கிரஸ் மேலிடம் கூறுகையில்,  ‘தேர்தலில் அலெக்சியோவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தததை அடுத்து மொத்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. காங்கிரசில் இருந்து விலகிய அலெக்சியோ விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.

கோவா சென்றது தேர்தல் குழு
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் சட்டமன்ற தேர்தல் குறித்து அடுத்த மாதத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து மாநிலங்களில் தேர்தல் தயார் நிலை குறித்து தேர்தல் ஆணையம் பார்வையிட்டு வருகின்றது. சமீபத்தில் இந்த குழு பஞ்சாப் சென்று வந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா, ஆணையர்கள் ராஜீவ் குமார், அனூப் சந்திரா பாண்டே உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று கோவா சென்றது. அங்கு அரசு நிர்வாகிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் குழு ஆலோசனை நடத்தியது.

Tags : Goa ,MLA , Goa, Cong. MLA, Resign
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...