திருப்பதியில் செல்வந்தர்களுக்கு மட்டுமே தரிசனம்: கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமி குற்றச்சாட்டு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை செல்வந்தர்கள் மட்டுமே தரிசிக்கும் விதமாக மாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலிக்க தேவஸ்தானம் திட்டமிட்டு இருப்பதாக கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமி குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நேற்று கர்நாடக மாநிலம், ஹம்பி பம்பா க்ஷேத்திரம், கிஷ்கிந்தா மடத்தின் கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:  உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செல்வந்தர்கள் மட்டுமே தரிசிக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, உதயாஸ்தமன சேவை டிக்கெட் 1 கோடி, 1.50 கோடிக்கு விற்பதாக அறிவித்துள்ளது. இந்த வருமானத்தில்  மருத்துவமனை கட்டுவதாக கூறுவது சரியான முடிவு அல்ல. இது பக்தர்களின் உணர்வுகளை தடுக்கும் வகையில் உள்ளது. இதனை உடனடியாக தேவஸ்தானம் நிறுத்தாவிட்டால் பல்வேறு மடாதிபதிகள், பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: