சுருட்டப்பள்ளியில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை: பக்தர்கள் வழிபாடு

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜையில் பொதுமக்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.  ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, ஆருத்ரா விழாவையொட்டி அதிகாலையில் விநாயகர், முருகன் - வள்ளி - தெய்வானை, வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், 10 மணியளவில் கோயில் வளாகத்தில் இருந்து உற்சவரான நடராஜர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் வைத்து  சுருட்டபள்ளியில் உள்ள முக்கிய வீதிகளிலும், பின்னர் ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சாலை, நேரு பஜார், ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. இதில், வழிநெடுகிலும் பக்தர்கள் நடராஜருக்கு தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.

Related Stories: