ஓய்வூதியர்களை எஸ்பிஐ கவுரவிப்பு

சென்னை: ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டம் சார்பில், ஓய்வூதியதாரர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில், தமிழகம் முழுதும் ராணுவம், ஒன்றிய, மாநில அரசுகள் உட்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற, 376 பேர் கவுரவிக்கப்பட்டனர். சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்ற பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்ட தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா, அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு வங்கியின் மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள் நேரில் சென்று கவுரவித்தனர்.

Related Stories: