×

இந்தியா-தெ.ஆ. முதல் டெஸ்ட் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் பாக்சிங் டேவான வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த டெஸ்ட்டில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

 முதலில் 2 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் மட்டும் போட்டியை நேரில் காண அனுமதி அளிக்கப்படுகிறது. இதனிடையே ஒமிக்ரான் பரவலால் உள்நாட்டு 4 நாள் இறுதிச்சுற்று ஆட்டத்தொடரை தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளது.

Tags : India ,TA , India-TA First Test fans not allowed
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...