இலங்கை படை கைது செய்த 55 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தம்....

இராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் 55 மீனவர்களையும், 8 படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை அடுத்தடுத்து சிறை பிடித்தது. மீனவ கிராமங்களில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி ராமேஸ்வர மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்குச் செல்லவில்லை. 1,000 படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

 சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் 55 பேரையும் விடுவிக்க ஒன்றிய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக எப்பொழுதும் பரபரப்பாக இயங்கக்கூடிய ராமேஸ்வர மீன்பிடி துறைமுகம் வெறிசோடி காணப்படுகிறது. வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றிக்கு 1 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒன்றிய அரசு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Related Stories: