×

பழநியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் பக்தர்கள் அவதி

பழநி : கடும் பனிமூட்டத்தின் காரணமாக பழநி வரும் பக்தர்கள் அவதியடைந்தனர்.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நாளொன்றிற்கு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பழநி நகரில் கடும் பனி பொழிந்து வருகிறது. காலை 10 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. வழக்கமாக காலை நேரங்களில்தான் ஐயப்ப பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.

அதீத பனிபொழிவின் காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகனங்களில் முன்புற விளக்குகள் எரிய விட்டு செல்ல வேண்டிய அளவிற்கு பனிமூட்டம் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் நிலவும் குளிரான சூழ்நிலை தற்போது பழநியில் நிலவுகிறது. தொடர்ந்து பகல் முழுவதுமே மேகமூட்டமான சூழலே நிலவுகிறது.

Tags : Palani , Palani: Devotees visiting Palani suffered due to heavy snowfall.
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை