×

எதிர்க்கட்சிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ஒன்றிய அரசு சதி செய்கிறது!: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு அழைப்பு விடுத்து எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. குறிப்பிட்ட கட்சிகளை மட்டும் அழைப்பு பிரிவினையை ஏற்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை கண்டித்தும் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாநிலங்களவை நடவடிக்கைகள் கடந்த வாரம் முழுவதும் முடங்கின.

கூட்டத்தொடர் முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் அனைத்து கட்சிகளையும் அழைக்காமல் குறிப்பிட்ட கட்சிகளை மட்டும் அழைத்து எதிர்கட்சிகளிடம் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதாக கூறி கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்போது எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் அரசு அழைப்பு விடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரச்சனைக்கு தீர்வு காண சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் சார்ந்துள்ள கட்சிகளிடம் மட்டுமே பேச விரும்புவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கூறினார். பிரச்சனைக்கு தீர்வு காண எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : U.S. government ,Congress , Opposition, faction, United Government, Congress
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...