×

2 ஆண்டுகளுக்குப் பின் நிலக்கல் டூ சென்னைக்கு அரசு பஸ்கள் இயக்கம்-ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

கம்பம் : நிலக்கல்லில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்து மேற்பட்ட பேருந்துகள் 2 ஆண்டுகளுக்குப் பின் இயக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.16 ந்தேதி திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக தொடக்கத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனதிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக 30 ஆயிரம் பக்தர்கள் வரை தினசரி தரிசனத்துக்கு அனுமதியளித்தனர்.

கடந்த வாரம் முதல் பம்பை நதியில் நீராடாவும், இரவு நேரங்களில் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும் தேவசம் போர்ட் அனுமதி அளித்தது. இதனையடுத்து மார்கழி முதல் தேதி முதல் அதிகளவில் தமிழக பக்தர்கள் வருகை இருந்தது. மாலை 7 மணி முதல் நிலக்கல்லில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பஸ் இயக்கம் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதனால் அதிகாலை 1 மணிக்கு மேல் தான் நிலக்கல்லில் இருந்து கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழுடன், ஆன்லைன் தரிசன டிக்கேட் உள்ளவர்கள்  மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பம்பையில் இருந்து காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களின் வசதிக்காக ஜன.14 ந்தேதி மகரவிளக்கு வரை சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது.

கொரோனா தாக்கத்தால் கடந்த இரண்டு வருடமாக இயக்கப்படாமல் இருந்த போக்குவரத்து மீண்டும் இவ்வருடம் முதல் சென்னைக்கு இயக்கப்படுவதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலக்கல்லில் இருந்து சென்னைக்கு கட்டணமாக 1050 ரூபாயும், திருச்சிக்கு 630 ரூபாயும், மதுரைக்கு 505 ருபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முரண்டு பிடிக்கும் கேரள போக்குவரத்து அதிகாரிகள்

தமிழக அரசு சார்பில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 42 அரசு விரைவு பஸ்கள் பம்பைக்கு சென்று வர பெர்மிட் வைத்திருந்த போதிலும், தற்சமயம் 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் பம்பைக்கு செல்ல பெர்மிட் இருந்த போதிலும் நிலக்கல் பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே இயக்க வேண்டும் என்றும், பஸ்கள் பம்பை செல்லக்கூடாது என கேரளா போக்குவரத்து அதிகாரிகள் அடாவடி செய்து வருகின்றனர்.

அதே நேரம் கேரள போக்குவரத்து துறை சார்பில் தொடர்ந்து பம்பை வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் சென்னையிலிருந்து பம்பைக்கு டிக்கெட் எடுக்கும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல்லில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் ஏறி பம்பை செல்லும் நிலை உள்ளது. இதை மாற்றி தமிழக பஸ்களும் பம்பை வரை செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என ருயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilakkal ,Chennai ,Ayyappa , Pillar: More than ten buses have been operated from Nilakkal to Chennai on behalf of the Tamil Nadu State Transport Corporation after 2 years.
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்