×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்த 800 பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி :  தமிழகத்தில் அரசு நடுநிலை பள்ளிகள், துவக்கப்பள்ளிகள் உள்ளிட்ட பள்ளி கட்டிடங்கள் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு நடுநிலை பள்ளிகள், துவக்கப்பள்ளிகள் சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் சுமார் 800 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது குறித்து ஆட்சியருக்கு ஆய்வு அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டன. அதனையடுத்து சேதமடைந்த நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க ஆட்சியர் தர் அறிவுறுத்தினார்.     

அதன்படி கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஆலத்தூர், சோமண்டார்குடி, மோகூர், க.மாமனந்தல், விளம்பார், காட்டனந்தல், புக்கிரவாரி, தச்சூர், வாணவரெட்டி, சிறுமங்கலம், சிறுவத்தூர் உள்பட 35 கிராமங்களில் 75 பள்ளி வகுப்பறைகளின் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனையடுத்து நேற்று பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளி கட்டிடம் அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.     
    
அப்போது கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் ஆய்வு செய்து பணிகளை பாதுகாப்பாக விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாணியந்தல் ஆறுமுகம், ஒன்றிய பொறியாளர் முகிலன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததை  கருத்தில் கொண்டு அதே பகுதியில் விரைந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kallakurichi district , School buildings including government middle schools and primary schools in Tamil Nadu have been damaged for a long time.
× RELATED கல்வராயன்மலையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்