×

போச்சம்பள்ளியில் பொங்கல் பண்டிகைக்கு தயாரான செங்கரும்பு

போச்சம்பள்ளி : பொங்கல் பண்டிகையினை எதிர்நோக்கி போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில், விவசாயிகள் அதிகளவு கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கரும்பு அமோகமாக விளைந்துள்ளது. போச்சம்பள்ளியில் இந்தாண்டு வழக்கத்தை காட்டிலும் சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், கரும்புகளை தோகை உரித்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா காரணமாக வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் கரும்புகளை கேட்ட விலைக்கு கொடுத்தனர்.

இதனால் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், நல்ல மழையால் விளைச்சலும் அமோகமாக உள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு பையுடன், கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளதால் அடுத்த சில நாட்களில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளதால், அதனை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


Tags : Pongal festival ,Pochampally , Pochampally: Farmers in the Pochampally area have been cultivating more sugarcane ahead of the Pongal festival.
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா