×

ஏலகிரி மலை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதி-தடுப்பூசி, முகக்கவசம் கட்டாயம்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 2வது தவணை தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே சோதனை செய்து போலீசார் அனுமதித்து வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷண நிலை நிலவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவின் பேரில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ கிரிவேலன் செயல்பாட்டில் முத்தானூர் அருகே உள்ள சோதனை சாவடி பகுதியில் ஏலகிரி மலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் சங்கர் உள்ளிட்ட போலீசார் ஏலகிரி மலை சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே சுற்றுலா தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் முகக்கவசம் இல்லாமல் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் மீதும் அபராதம் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தற்போது பரவிவரும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பிலிருந்து மலைவாழ் மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனால் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரண்டாம் தடுப்பூசி தவணை மற்றும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு ஏலகிரி மலை காவல் நிலையம் சார்பில் அங்குள்ள சோதனை சாவடி மையத்தில் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனைக்கு பிறகே சுற்றுலாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : Yelagiri Hill Checkpoint , Jolarpet: Tourists visiting the Yelagiri Hills for the 2nd installment of the Vaccine and Mask Wearers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி